பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் நினைவு தினம் 

    இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக பிரிட்டிஷாரால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு சட்ட வரைவுகளுக்கு  எதிராக  அது தாக்கல் செய்யப்படும் போது ஆளும்கட்சி உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு பின்புறம் குண்டு வீசி இச்சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் எழுந்து கொண்டிருந்த கண்டனக் குரல்களை சர்க்காருக்கு கேட்கும்படி செய்தனர்.
   குண்டு வீசி தப்பிக்க நேரமிருந்தும் தோழர்.பகத்சிங், தோழர்.பட்டுகேஸ்வர்தத்தும் உரத்த குரலில் "தொழிலாளிவர்க்கம் வாழ்க...ஏகதிபத்தியம் ஒழிக...புரட்சி ஓங்குக..."என்று  முழங்கியவாறே கைதாகினர். நீதிமன்ற விசாரணைகளுக்கு பிறகு தோழர்கள் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் ஆகியோர் மீது ராஜதுரோக குற்றம் சட்டி 1931 மார்ச் 23 அதிகாலை துக்கிலிடப்பட்டனர். இந்த இளம் வீரர்களின் போராட்டம் மனிதகுலம் இருக்கும் வரையிலும், சுரண்டலுக்கு எதிரான போரட்டத்திற்கு  உந்துசக்தியாக  இளைஞர்களுக்கு வழிகாட்டும்.
   
                       
                            பகத் சிங்      ராஜா குரு      சுக தேவ் 


"மார்ச் 22 பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் 13-வது  அமைப்புதினம்" நிகழ்ச்சிகள் சிறக்க வாழ்த்துக்கள் சர்வதேசப் பெண்கள் தின வாழ்த்துகள் மார்ச் 8 
சங்க அமைப்பு தின விழா (07-02-2013)                 புகைப்படங்கள்   
வேலை நிறுத்தத்தில் ஏன் பங்கெடுக்க வேண்டும்?
Add caption
                                 


  நன்றி: தீக்கதிர் நாட்டில் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து(11-01-2013) ஆர்ப்பாட்டம்:
                                                           நன்றி:தினகரன் 
                                                          நன்றி:தினமணி 
                                                                நன்றி:இந்து 
                                                                   நன்றி:தீக்கதிர் 


 
மாவட்ட மாநாடு (15-08-2012) நிகழ்வுகள்:
மாவட்ட மாநாட்டு தீர்மானங்கள்:மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட எதிர்கால கடமைகள்:

மாவட்ட சங்க நிர்வாகிகள் : 
CIRCULARS:- 
மாவட்ட செயற்குழு சுற்றறிக்கை:

 ------------------------------------------------------------------------------

        சங்கம் உதயமாவதற்கு முன், பின்....


         நவீன தாராளமயக் கொள்கையின் கொள்கையின் காரணமாக அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த தொலைத் தொடர்புத்துறை (DOT) 2000 ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் பிஎஸ்என்எல் பொதுத்துறையாக மாற்றப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையிலும் பிஎஸ்என்எல் பொதுத்துறையிலும் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஒப்பந்தத் தொழிலாளிகளாக பணியாற்றி வருகிண்றனர். வாழ்வின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்ட அத்துக் கூலிகளாக, அடுக்கி வைக்கப்பட்ட மூட்டையில் அடிமூட்டைகளாக சமூக பாதுகாப்பின்றி இருந்தது ஒப்பந்த ஊழியர்களின் முந்தைய நிலை.


 • குறைந்தபட்ச ஊதியம் ரூ.2 துவங்கி அதிகபட்சம் ரூ.40 வரை...
 • ஊழியர்கள் அன்றாடம் மாற்றப்படுகிற நிலை...
 • சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடையாது...
 • அதிகாரிகள் முன்பு கூனிக் குறுகி நிற்க வேண்டிய நிலை...
 • அமருவதற்கு இருக்கைகள் கிடையாது...
 • அதிகாரிகளின் வீட்டு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய தேவை...
 • மனமகிழ் மன்றங்க்களுக்குள் அனுமதி மறுப்பு...
 • போராடும் உரிமை மறுக்கப்பட்டது...  

      இன்னும் எண்ணற்ற துன்ப துயரங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆளானார்கள். நிலைமைகள் இப்படி தொடர...

       1999 பிப்ரவரி 7ல் ,ஒப்பந்த ஊழியர்களின் விடிவெள்ளியாய் தமிழகத்தில் "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்" திண்டுக்கல்லில் உதயமானது. இதற்க்குப் பிறகு ஒப்பந்த ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராடத் துவங்கினர்.


        பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய இயக்கங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஏ.வி.பெல்லார்மின், பி.ஆர்.நடராஜன், சி.ராஜேந்திரன் ஆகியோரின் ஆதரவாலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாடு முழுவதும் சீரான சம்பளத்தை வழங்க வேண்டுமென்ற உத்தரவை 2010-மே 6ம் தேதி  பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்டது. இந்த உத்தரவினை த்மிழகத்தில் அனைத்து தொலைத் தொடர்பு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊழியர்கள் பயனடைந்திருக்கிறார்கள் என்றால் "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின்" பங்கு மகத்தானது.  

இன்னும் பயணிக்க வேண்டியது:

 •  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி நிலையை காரணம் காட்டி ஒப்பந்த உழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதை எதிர்த்தும், மாதம் முதல் வாரத்தில் சம்பளப்பட்டுவாடவை உறுதி செய்வது. 
 • இ.எஸ்.ஐ, இ.பி.எப் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்களை கண்காணிப்பதும், ஊழியர்களுக்கு கிடைக்கச் செய்கிற பணியினை முதன்மை பணியமர்த்துநர் செய்ய வைக்க வேண்டிய மிக முக்கியமான கடமையாகும்.
 • ஒப்பந்த தொழிலாளர் சங்கத்திற்கு தொழிற்சங்க அங்கீகாரம் பெறுவது, சம வேலைக்கு சம ஊதியம் என்கிற இலக்கை அடைவது, நிரந்தரத்திற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவது.