ஒற்றுமையின் வெற்றி...

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தமிழ் மாநிலம்

முறிப்பை ஏற்படுத்திய நீலகிரி தோழர்கள்

செய்த வேலைக்கு சம்பளம் வழங்காத நிர்வாகத்தின் அராஜகத்தை முறியடித்து நீதிமன்றம் மூலமாக சில மாதங்களுக்கு முன் சம்பளம் பெற்றோம்.


சம்பள நிலுவை வாங்கிய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் எத்தனை மாத சம்பள நிலுவை வழங்கப்பட்டது?, என்ன சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்கப்பட்டது?, ஒவ்வொரு மாதமும் எத்தனை நாளுக்கு வழங்கப்பட்டது? போன்ற விவரங்களை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

விவரம் கேட்டால் வழங்க முடியாது..கணக்கு சொல்ல முடியாது..கொடுப்பதை வாங்கிக் கொள் என்று இறுமாப்புடன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் மறுத்தன.

Dy. CLC-யிடம், CGM-இடம் கேட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கை காட்டியது.

ஒப்பந்த தொழிலாளர்கள் ஆத்திரப்பட்டனர்..நீலகிரி தோழர்களோ ஆத்திரத்துடன் போராட்டத்தில் இறங்கினர்..

6-10-2021 அன்று 45 நிரந்தர தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் கோவை PGM அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.. 

போராட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சம்பள விவரம் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. உறுதி மொழிகளோடு அன்று மாலையே முழு சம்பள விவரம் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் எந்த மாவட்டத்திலும் சம்பள விவரம் வழங்க முடியாத சூழ்நிலைமையில் நீலகிரி தோழர்கள் போராடி பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டி உள்ளனர்.

நீலகிரி தோழர்களை பாராட்டுகிறோம்..

தோழமையுடன்

C.வினோத்
மாநிலச் செயலாளர்


 
பேரணி

தோழர்களே வணக்கம்... 

அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவலுக்கு இணங்க 5.10.2021BA மற்றும் SSA தலைநகரங்களில் நடைபெற இருக்கின்ற பேரணி போராட்டத்தினை நமது மாவட்டத்தில் குன்னூர், உதகை, கூடலூர் என மூன்று மையங்களில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


தோழமையுடன்

BSNLEU, TNTCWU, AIBDPA 

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு

BSNLEU TNTCWU AIBDPA ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறவுள்ள SSA/BA தலை நகரங்களில் பேரணி போராட்டம்


 

மே தின வாழ்த்துக்கள்..

 தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பில் **135- வது மே தின* வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...💪💪💪